கவுதம் மேனனுடன் இணையும் அஜித்

ஆசிரியர் - Admin
கவுதம் மேனனுடன் இணையும் அஜித்

அஜித்தும் கவுதம்மேனனும் இணைந்த படம் என்னை அறிந்தால். உணர்ச்சிகரமான, அதிரடி படமாக உருவாகிய என்னை அறிந்தால் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கவுதம்மேனன் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார். அவர் இயக்கி தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது.

அடுத்து அனுஷ்காவை வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தையோ அல்லது அருண்விஜய்யை கதாநாயகனாக்கி ஒரு படத்தையோ இயக்குவார் என்று செய்திகள் வந்தன. அதேநேரத்தில் மாதவனை வைத்து ஒண்ராகா என்ற படத்தையும் கவுதம் மேனன் இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில், கவுதம்மேனன் அஜித்துக்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். அதை சொல்வதற்கு அஜித்திடம் நேரம் கேட்டிருக்கிறாராம். அஜித் இப்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

கவுதம்மேனன் மீது அஜித்துக்கு பிரியம் உண்டு. தன்னை இளமையாக காட்டியதோடு வெள்ளை நிற முடியிலேயே தன்னை அழகாக காட்டியவர் கவுதம்மேனன் என்பதால் கவுதம்மேனனுக்கு, அஜித் படம் பண்ணுவார் என்கின்றனர். சிவா இயக்கும் படம் கிராமம் சார்ந்த கதை என்பதால் அடுத்து கவுதம்மேனன் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க எச்.வினோத்தும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.