SuperTopAds

வெள்ளிக்கிழமை விடுமுறை..! பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டது..

ஆசிரியர் - Editor I
வெள்ளிக்கிழமை விடுமுறை..! பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டது..

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின்  செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏற்படப் போகும் உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரச ஊழியர்களது வீடுகளில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதற்கும் குறித்த அரச நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீதித்துறை நடவடிக்கைகள் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.