மீண்டும் எரிபொருள் எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாக கூறவே முடியாது..! கை விரிக்கிறார் அமைச்சர்...
735 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரையில் எரிபொருள் நிறுவனங்களுக்கு செலுத்தவேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
இதேபோல் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் மீண்டும் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் திகதி தொடர்பில் தற்போது சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.