மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மருத்துவர்..! மேல் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்...
வைத்தியசாலைக்கு வந்திருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மருத்துவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மருத்துவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செய்திருந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி நீர்கொழும்பு ஆதார மருத்துவமனையின் சத்திரசிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர், இளம் பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்திய பின் கொலை செய்தார்.
2014ஆம் ஆண்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வண்புணர்வு மற்றும் கொலைக் குற்றத்திற்காக மருத்துவர் தண்டிக்கப்பட்டார்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு நீதியரசர்கள் சம்பத் அபேகோன், பி குமாரரட்ணம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கொலைக்கு ஒரு நிமிடம் முன்பு குற்றம் சாட்டப்பட்டவரின் அறையில் பெண் இருந்தது உறுதி செய்யப்பட்டமை நீதிமன்றத்தில் தெரியவந்தது.
பெண் இறக்கும்போது வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதன்படி நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.