SuperTopAds

இலங்கையில் இன்புளுவன்சா தொற்று அபாயம்..! தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் இன்புளுவன்சா தொற்று அபாயம்..! தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு..

இலங்கையில் இன்புளுவன்சா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதரிகரிப்பதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார். 

குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 

காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் என டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

சிறுவர்கள் மத்தியில் இந்நோய் எளிதில் பரவக்கூடியது. இதனால் சிறுவர்கள மற்றும் பெரியவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் எனவும்,

குறிப்பாக வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும்போது முக கவசத்தை அணிவது மிக முக்கியமானது என்றும் டொக்டர் தீபால் பெரேரா கூறினார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு இயற்கை திரவங்கள், பரிந்துரைக்கப்பட்ட பாராசிட்டமால் குளிசை வழங்கலாம் என்று தெரிவித்த அவர் ஓய்வும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.