அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! அடுத்த வாரம் அமுலுக்குவரும் புதிய திட்டம்..
வெள்ளிக்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம் அமுலுக்குவரும் என பொதுநிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார்.
நாட்டில் உருவாகியிருக்கும் தீவிரமான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.