ஆசிரியர்கள் - மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து வாரத்தில் தலா 3 நாட்கள் மட்டும் பாடசாலை..! புதிய திட்டம் கல்வி அமைச்சிடம்..
நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை 2 பிரிவாக பிரித்து வாரத்தில் தலா 3 நாட்கள் மட்டும் பாடசாலைக்கு அழைக்கும் யோசனையை அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் முன்வைத்துள்ளது.
அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை,
அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்படி தகவல்களை வெளியிட்டுள்ளார்.