அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்! விசேட வர்த்தமானி வெளியானது, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை...
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிவிசேட வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் குறித்த வர்த்தமானி அறிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதன்படி சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.