காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு! காதல் விவகாரத்தால் மகனை தாக்கியவர்களே துாக்கி ஆற்றில் வீசியிருக்கலாம் என பெற்றோர் சந்தேகம்..
17 வயதான சிறுவன் 2 நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் களுகங்கை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
நேற்ற பிற்பகல் பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் குடும்பத்தார் மகனை தாக்கியிருந்ததாகவும்
தொிவித்துள்ள மாணவனின் பெற்றோர், எனவே தமது மகன் தண்ணீரில் குதித்தாரா? அல்லது யாராவது ஒருவர் அவரை ஆற்றில் தள்ளி விட்டாரா?
என்பது குறித்து சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.