யார் அந்த டீசல் மாபியாக்கள்??? புதுப்பிக்க தக்க மின் உற்பத்தி திட்டங்களை கருவறுப்பதும் அவர்களேயாம்..
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களை உருவாக்குவதை தடுப்பதற்கு டீசல் மாபியாக்களுடன் இருப்பவர்களே காரணம். என நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு எதிராக குரல் கொடுக்காத தொழிற்சங்கங்களும்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எதிர்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.