SuperTopAds

அரச நிர்வாக பதவிகளில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுகிறேன்..! பதவி துறப்பின் பின் பஸில் ராஜபக்‌ஷ..

ஆசிரியர் - Editor I
அரச நிர்வாக பதவிகளில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுகிறேன்..! பதவி துறப்பின் பின் பஸில் ராஜபக்‌ஷ..

அரச நிர்வாக பதவிகளில் இருந்து நிரந்தரமாகவே விலகி கொள்வதாக கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்‌ஷ, அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார், இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

அரசியல் மற்றும் அரச நிர்வாகம் ஆகிய இரண்டிலும் இதுவரையில் பங்கெடுத்து வந்த தான், 

இனி எந்தவொரு அரச நிர்வாக பதிவிகளையும் வகிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசியலில் இருந்து திடீரென விலகிச்செல்ல முடியாது எனவும் பசில் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.

தன்னை தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.