எவ்வேளையிலும் மின்வெட்டு நடக்கலாம்..! தொழிற்சங்க போராட்டம் ஆரம்பம்..
இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் நேற்றய நள்ளிரவு தொடக்கம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
மின்சார சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 8 மணிவரை நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அத்தியட்சகர்கள் சங்கம் உத்தேச வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை.
என பகிரங்கமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதுடன், நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் தேசிய மின் கட்டமைப்பை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.