அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்ட மின் விநியோகம்! ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை..
மின் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றார்.
நேற்றய தினம் 8ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் மின்சார பொறியியலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.