SuperTopAds

நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளையும் கலைக்க நடவடிக்கை..! ஜீலையில் கலைக்கப்படலாம் என தகவல்..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளையும் கலைக்க நடவடிக்கை..! ஜீலையில் கலைக்கப்படலாம் என தகவல்..

நாட்டில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கலைக்கும் விசேட அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் 13 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அரசாங்கம் செலவீனங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பிரதேசசபை மாநகரசபை, நகரசபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை இவ்வாறு கலைக்கப்படவுள்ளது.

பிரதேசசபையின் அதிகாரங்கள் பிரதேசசபை செயலாளருக்கு பேரளவில் வழங்கப்படுவதோடு தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் விசேட சுற்றுநிருபம் மூலம் பிரதேச செயலாளர்கள் 

மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் கலைக்கப்படும் மாநகர சபையின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களுக்கும்,

நகரசபைகளின் அதிகாரம் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதோடு உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட ஆணையாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கான அமைச்சரவை தீர்மானம் எதிர்வரும் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதமளவில் சகல உள்ளுராட்சி மன்றங்களையும் கலைக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.