SuperTopAds

ஒரு நாளில் பல தடவைகள் எரிபொருள் நிரப்பிய 5221 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது! நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
ஒரு நாளில் பல தடவைகள் எரிபொருள் நிரப்பிய 5221 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது! நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்..

ஒரு நாளில் பல தடவைகள் எரிபொருள் நிரப்பும் 5221 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தொிவித்துள்ளது. 

பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலியான Fuel IMC மூலம் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில பாவனையாளர்களால் எரிபொருள் கொள்வனவு 

மற்றும் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புதிய செயலியை நாடு முழுவதும் உள்ள 1,420 நிரப்பு நிலையங்கள் பயன்படுத்துகின்றன. மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், 

ஒரு வாகனத்துக்கு மீண்டும் மீண்டும் எரிபொருள் நிரப்புவது குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி 1,450 வாகனங்களில் இவ்வாறு எரிபொருள் நிரப்பப்பட்டதை அவதானித்ததாக அவர் தெரிவித்தார்.