அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 5 வருடங்கள் சம்பளமில்லாத விடுமுறை..
தொழில் தேவைகளுக்காக அல்லது வேறு தேவைகளுக்காக அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு 5 வருடங்கள் சம்பளமில்லாத விடுமுறை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்டுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், அரச ஊழியர்கள் 5 வருட நிறைவில் சம்பளம் இல்லாமல் விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு
மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரச ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும்.
எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.