நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..! விநியோகம் எப்போது..?
நாடு முழுவதும் எதிர்வரும் செவ்வாய் கிழமை தொடக்கம் சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க முடியும். என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இன்று மற்றும் ஆகிய தினங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்.
என லிட்ரோ நிறுவனம் பொது மக்களை கோரியுள்ளது.எ வ்வாறாயினும் அத்தியாவசிய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவையான
37.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.