SuperTopAds

பொதுமக்களிடம் அடிவாங்கி சமூகவலைத்தளங்களில் பிரபலமான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கைது!

ஆசிரியர் - Editor I
பொதுமக்களிடம் அடிவாங்கி சமூகவலைத்தளங்களில் பிரபலமான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கைது!

அலரிமாளிகை சுற்றாடல் மற்றும் காலிமுகத்திடல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொதுமக்களின் தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் சந்தேக நபராக இவரது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், உடனடியாக கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

அதற்கமைய, குறித்த சந்தேக நபர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.