SuperTopAds

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் புரிய முயன்றவராம்..

ஆசிரியர் - Editor I
சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் புரிய முயன்றவராம்..

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேகநபர் ஏற்கனவே வீடு புகுந்து பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியிருக்கின்றார். 

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தொிவிக்கையில், “நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். நான் எனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் 

அவர் என் வீட்டிற்குள் வந்து எனது வாயை அடைத்தார் அந்த சந்தர்ப்பத்தில் நான் கண்விழித்து விட்டேன் பின்னர் அவர் என்னை கயிற்றால் கட்ட முயன்றார். நான் கத்தினேன். அவர் உடனடியாக வீட்டிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார் ”

அதன் பின்னர் நான் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அப்போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாத்திமாவுக்கு இப்படியொரு கதி வந்திருக்காது 

என்றும் அந்த பெண் மேலும் கூறியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.