SuperTopAds

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்திய பிரதமர் வழங்கியுள்ள உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்திய பிரதமர் வழங்கியுள்ள உத்தரவாதம்..

காலபோக நெற்செய்கைக்கு தேவையான உரத்தினை வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். 

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் நேற்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்த 20 நாட்களுக்குள் இதனை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.