வரி அதிகரிப்பின் எதிரொலி..! பல பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டது..
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்கவரி மீதான கூடுதல் கட்டணம் உள்ளிட்டவற்றை 12 வீதத்தினால் அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்திருக்கின்றது.
இந்நிலையில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ட்ரைஷாக்களுக்கான டயர்கள்- குளிரூட்டி, சலவை இயந்திரங்கள், குக்கர், மைக்ரோவேவ் அவண்கள், குளிர்சாதன பெட்டிகள்
கையடக்க தொலைபேசிகள்- பிற மின் சாதனங்கள்- சொக்லேட்டுகள்- இறக்குமதி செய்யப்பட்ட தயிர், வெண்ணெய் - அப்பிள், திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவற்றுக்கான வரிகள் அதிகரிக்கப்ட்டுள்ளன.
இதனால் மேற்படி பொருட்களுக்கான விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ பட்டர் 1500 ரூபாயாகவும் சீஸ் 2 ஆயிரம் ரூபாயாகவும் யோகட் 2 ஆயிரம் ரூபாயாகவும் ஒரேஞ், திராட்சை, அப்பிள்
600 ரூபாயாகவும் பேரீச்சம் பழம் 200 ரூபாயாகவும் அதிகரிக்கின்றன. இந்த அதிகரிப்பு நேற்று 1ம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகியுள்ளது.