SuperTopAds

கணவன் - மனைவி இடையே தகராறு..! மனைவி மற்றும் மனைவியின் சகோதரனை அடித்து கொன்ற கணவன்..

ஆசிரியர் - Editor I
கணவன் - மனைவி இடையே தகராறு..! மனைவி மற்றும் மனைவியின் சகோதரனை அடித்து கொன்ற கணவன்..

குடும்ப சண்டையில் சமாதானம் பேச முயற்சித்தமையால் ஏற்பட்ட தகராறில் சகோதரனும், சகோதரியும் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நவகத்தேகம - முல்லேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச் சம்பவம் குடும்ப தகராறினால் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு இடம்பெற்ற நிலையில், மனைவியின்  மூத்த சகோதரர் வந்துள்ளார், 

இதன்போது தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரனை குத்தி கொலை யெ்துள்ளார். 

உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் ஆவர். சந்தேகநபர் காயமடைந்த நிலையில் 

புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.