வீட்டில் சடலமாக கிடந்த தந்தையும், மகளும்! பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தாய், விசாரணையில் திணறும் பொலிஸார்..
களுத்துறை - ஹினட்டியன்கல பகுதியில் உள்ள வீடொன்றில் தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. வீட்டிலிருந்த தாயாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை வீட்டிலிருந்த கதிரையொன்றிலும் மகள் வீட்டு வரவேற்பறையிலும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
69 வயதான தந்தையும் 33 வயதான அவரது மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் களுத்துறை-நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.இ
ந்த சம்பவம் கொலையா என்பது தொடர்பில் இதுவரை கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.