9 வயது சிறுமி ஆயிஷா கொல்லப்பட்டது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மைகள்..
காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 சட்டவைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த சிறுமி நீரில் மூழ்கடிக்கப்பட்டு சேறு மற்றும் நீர் உடலினுள் சென்றதால் மரணம் சம்பவித்ததாக கூறப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
பின்னர் மறுநாள் (28) குறித்த சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில்
சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை அல்லது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கையில்
சந்தேக நபரால் குறித்த சிறுமி வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்போது சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுதியபோது அவரை எதிர்வரும் 2 தினங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் குறித்த சிறுமியின் தந்தையுடன் நெருக்கமாக பழகுபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.