SuperTopAds

9 வயதான சிறுமி கொலைச் சம்பவத்தில் திருப்பம்! கைதான சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது..

ஆசிரியர் - Editor I
9 வயதான சிறுமி கொலைச் சம்பவத்தில் திருப்பம்! கைதான சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது..

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதான சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கைதான 29 வயதான நபர் இந்த கொலையை செய்துள்ளார். 

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு 

மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா, 

மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.