கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு! ஒரு முட்டையின் விலை 50 ரூபாவரை உயருமாம்..
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படும் என இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் கூறியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1,200 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.