SuperTopAds

எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தாருங்கள்..! இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முன்னாள் அமைச்சர்...

ஆசிரியர் - Editor I
எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தாருங்கள்..! இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முன்னாள் அமைச்சர்...

என்னை எனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு அழைத்து பாதுகாப்பு வழங்குங்கள் எனக்கோரி முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதிக்கவில்லை என்றும், தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் வன்முறைக் கும்பலால் முற்றாக எரிக்கப்பட்டதால் 

இன்று இந்த நாட்டில் வீடற்ற மனிதனாக தான் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.