காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி ஆவேசம்!
இறைச்சி வாங்க சென்று காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் அதி துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியிருக்கின்றார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறுகிறேன்.
இந்த கொடூர குற்றத்தை புரிந்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியை செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
9 வயதுடைய ஆயிஷா நேற்றுமுன்தினம் காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.