விமல் வீரவங்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறை..!
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி ஷாசி வீரவங்சவுக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருக்கின்றது.
போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றிருந்ததற்கு அமைய, இது தொடர்பில் விசாரணை செய்த,
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான், புத்திக ஸ்ரீ ராகலவினால் 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.