அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பா? அப்படி எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையாம்! பிரதமர் அலுவலகம் அறிக்கை..
அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. என பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
மிக விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன்,
சுகாதாரம், கல்வி தவிர்ந்த மற்றைய அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.