SuperTopAds

வன்செயல்கள் நடந்தபோது முப்படையினர் கவனயீனமாக இருந்தது ஏன்? விசேட குழு விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
வன்செயல்கள் நடந்தபோது முப்படையினர் கவனயீனமாக இருந்தது ஏன்? விசேட குழு விசாரணைகள் ஆரம்பம்..

கொழும்பில் இடம்பெற்ற மிகமோசமான வன்செயல்களின்போது முப்படையினர் கவனயீனமாக இருந்தது ஏன்? முப்படையினர் தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளனவா? என்பதை ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹானவில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் மே மாதம் 9ஆம் திகதி நாடு தழுவிய பதற்ற நிலையின் போதே முப்படையினரால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றதா என்பதை ஆராய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட, விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் ஆர்.எம்.தயா ரத்நாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.