SuperTopAds

ஒரு பேருந்துக்கு எரிபொருள் நிரப்ப 1000 ரூபாய் கப்பம் கேட்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள்! சேவையிலிருந்து விலகும் தனியார் பேருந்துகள்..

ஆசிரியர் - Editor I
ஒரு பேருந்துக்கு எரிபொருள் நிரப்ப 1000 ரூபாய் கப்பம் கேட்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள்! சேவையிலிருந்து விலகும் தனியார் பேருந்துகள்..

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகப்போவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தொிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டதாவது, 

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கப்பம் கோருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பஸ் ஒன்றுக்கு 100 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்கு 1000 ரூபாய் கப்பம் கோருவதாக அவர் தெரிவித்தார். அதன்படி, முறையாக டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 

சாதாரண தர பரீட்சைக்கு பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.