SuperTopAds

குறைந்த வருமானம் பெறுவோருக்கு சற்று ஆறுதலான செய்தி! 2 மாதங்களுக்கு உதவித் தொகை...

ஆசிரியர் - Editor I
குறைந்த வருமானம் பெறுவோருக்கு சற்று ஆறுதலான செய்தி! 2 மாதங்களுக்கு உதவித் தொகை...

நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினால் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

33 இலட்சம் பேருக்கு இந்த நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரையிலான நிதியுதவியை வழங்கப்படவுள்ளது. 

இதன்படி, 17,65000 சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 7,30000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3,300,000) முதியவர்கள், 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களும் இந்த பலனை அனுபவிக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 

அடுத்த வாரம் மே மாதத்திற்கான உதவித்தொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி 

பயனாளிகளுக்கு மூன்று மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.