இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் உயர்வு..!
இ.போ.ச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
நேற்றிரவு எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறைந்தபட்சம் 19.5 சதவீதத்தினால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும், தற்போது குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 32 ரூபா அறவிடப்படும்.
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.