எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டாலும் இலாபம் இல்லை! செலவுகளை ஈடு செய்யவே விலை அதிகரிப்பாம்...
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,
மேற்படி விலை சூத்திரத்தில் இறக்குமதி, தரையிறக்கம் மற்றும் விநியோக செலவுகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இலாபம் உள்ளடக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மற்றும் ஏனைய காரணிகள் என்பவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு, தரையிறக்குவதற்கான செலவு, விநியோகிப்பதற்கான செலவு மற்றும் வரி கட்டணம் என்பற்றின் அடிப்படையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும்
எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.