போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகிறது..!
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கமைய போக்குவரத்து மற்றும் இதர சேவை கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைசூத்திரம் பயன்படுதப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கட்டணங்களைத் திருத்துவது குறித்து கலந்துரையாடுமாறும் போக்குவரத்துத்துறையிடம் கோரியுள்ளார்.