SuperTopAds

அதிகாலையில் மீண்டும் உச்சம் தொட்டது எரிபொருட்களின் விலை..! மக்கள் தலையில் இடி..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் மீண்டும் உச்சம் தொட்டது எரிபொருட்களின் விலை..! மக்கள் தலையில் இடி..

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் விலை அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளது. 

இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் 82 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 420 ரூபாயாகவும், 95 ஒக்ரைன் பெற்றோல் 77 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 

அதேபோல் ஓட்டோ டீசல் 111 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபாயாகவும், சூப்பர் டீசல் 116 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.