SuperTopAds

எரிபொருட்களின் விலை 400 தொடக்கம் 450 ரூபாய்வரை அதிகரிக்கப்படலாம்! அமைச்சரவையில் பேசப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் தகவல்..

ஆசிரியர் - Editor I
எரிபொருட்களின் விலை 400 தொடக்கம் 450 ரூபாய்வரை அதிகரிக்கப்படலாம்! அமைச்சரவையில் பேசப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் தகவல்..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்படும் நிலையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இதன்படி 400 ரூபாய் தொடக்கம் 450 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் எனவும் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், 

தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 

அதேபோல் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரின் நலன் கருதி மண்ணெண்ணெய் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், 

கொழும்பு ஊடகங்களின் ஊடாக அறிய முடிகின்றது.