எரிபொருள் விநியோகத்தை நிறுத்துங்கள்! பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் பல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை..
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் மிகுந்த அநாகரிகமாக நடந்து கொள்வதுடன் வன்முனை முயற்சிகளும் இடம்பெறுவதால் தமக்கான விநியோகத்தை நிறுத்தும்படி பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.எரிபொருள் எடுக்க வரும் பொதுமக்கள் வன்முறை முயற்சிகளும் நடப்பதை அவதானிக்க முடிகிறது.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, தேவையான எரிபொருள் விநியோகம் கிடைக்கும் வரை எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த அனுமதி கோரியுள்ளனர்.