SuperTopAds

பொலிஸ் சுற்றிவளைப்பில் 50 ஆயிரம் அமொிக்க டொலருடன் ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் சுற்றிவளைப்பில் 50 ஆயிரம் அமொிக்க டொலருடன் ஒருவர் கைது..!

வெலிக்கடை - ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 50 ஆயிரம் அமொிக்க டொலர் வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

சட்டவிரோத உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையர் ஒருவர் வைத்திருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது.

அந்த வகையில், இலங்கையில் வசிப்பவர் தம்மிடம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பானது 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்படுவதற்கான 

ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.