நான் ஒரு விமானி என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்..! அவர் விமானியே இல்லை என்கிறது விமானிகள் சங்கம், புழுகு கதை அம்பலம்..

ஆசிரியர் - Editor I
நான் ஒரு விமானி என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்..! அவர் விமானியே இல்லை என்கிறது விமானிகள் சங்கம், புழுகு கதை அம்பலம்..

தான் தேசிய விமான சேவையில் விமானியாக பணியாற்றியதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ ஒரு விமானியே இல்லை. என இலங்கை விமானிகள் சங்கம் கூறியுள்ளது. 

ஒரு விமானியாக தான் கடமையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ சமீபத்தில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.

அதற்கமைய, ALPGSL என்ற ஒரேயொரு விமானிகள் சங்கம் மாத்திரமே இலங்கையில் இருப்பதாகவும், 

ஆனால் குறித்த சங்கத்தில் அருந்திக்க பெர்ணான்டோ எம்.பி. விமானியாக செயற்பட்டதற்கான எந்தவொரு தரவுகளும் இல்லையெனவும் 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தான் விமானியாக பணியாற்றியதற்கான பல ஆவணங்கள் கடந்த 9ம் திகதி வன்செயலின்போது தனது வீட்டுக்கு தீ வைத்ததால் அழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு