நாடு முழுவதும் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மின் விநியோகம்..! மிக விரைவில் என்கிறது அரசு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மின் விநியோகம்..! மிக விரைவில் என்கிறது அரசு..

நாடு முழுவதும் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மின்சாரம் மிக விரைவில் வழங்கப்படும். என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். 

நுரைச்சோலை அனல்மின் நிலையம் திருத்தப் பணிகளின் பின்னர் நாளைய தினம் முழுமையாக இயங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 

நீர் மின் உற்பத்தியுடன் அடுத்த வார தொடக்கத்தில் நாடு முழுவதும் தடையில்லா மின்சாரத்தை வழங்க ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

ஜூன் 1-ம் திகதிக்குள் தடையில்லா மின்சாரம் வழங்குவதே ஆரம்பத் திட்டமாக இருந்தது, 

ஆனால் இப்போது அடுத்த வார தொடக்கத்தில் இருந்து அதைத் தொடங்க முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

இதேபோல் எரிபொருளை பதுக்கி வைக்க வேண்டாம் என மக்கள் எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார். 

எனவே, பொதுமக்களுக்கு போக்குவரத்துத் தேவைகளுக்கு அதிக எரிபொருள் கிடைக்க வேண்டும்.காஞ்சன விஜேசேகர தொடர்ந்து கூறுகையில், 

மின்சார நெருக்கடிக்கு முன்னுரிமை அடிப்படையில் முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 

ஆனால் எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வு இல்லை. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு