இன்றைய நாள் எப்படி 14/05/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 14/05/2018

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 31ம் தேதி, ஷாபான் 27ம் தேதி,
14.5.18 திங்கட்கிழமை. தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:32 வரை;
அதன் பின் அமாவாசை திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:57 வரை;
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை.

மேஷம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்காக கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

ரிஷபம்: மாறுபட்ட கருத்து கொண்டவரை சந்திக்க நேரிடலாம். பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வாகன போக்குவரத்தில் மிதவேகம் கடைபிடிக்கவும்.

மிதுனம்: பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.

கடகம்: பெருந்தன்மை மிக்கவராக விளங்குவீர்கள். நற்செயலில் ஈடுபட்டு சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

சிம்மம்: செயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: மாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழி வகுக்கும்.

துலாம்: செயல் நிறைவேற தாமதம் ஆகலாம். சிறிய பணி கூட சுமையாக இருக்கலாம். தொழில், வியாபாரம் சிறக்க விடாமுயற்சி அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

விருச்சிகம்: செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: சிலர் சுயநலத்துடன் அணுகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். வெளியூர் செல்ல நேரிடலாம்.

மகரம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். அன்றாட வாழ்வில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் விதத்தில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவி விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

மீனம்: பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி உண்டாகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு