SuperTopAds

ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவை மீறி அமைச்சு பதவியை பொறுப்பேற்றது ஏன்? ஹரீன் பெர்ணான்டோ விளக்கம்..

ஆசிரியர் - Editor I
ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவை மீறி அமைச்சு பதவியை பொறுப்பேற்றது ஏன்? ஹரீன் பெர்ணான்டோ விளக்கம்..

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டே அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளதாக ஹரீன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொது நிலைப்பாட்டினை மீறி அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லை எனவும், தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி மேற்கொள்ளுமானால் அதற்கு முகங்கொடுக்க தான் தயார் எனவும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு சதவீதம் கூட தான் பின்வாங்கவில்லை என தெரிவித்த ஹரீன் பெர்ணான்டோ, 

தானும் ரணிலும் ஒரே படகில் தற்போது இருந்தாலும் புயலில் சிக்கியுள்ள கப்பலை கரைக்கு கொண்டுவருவதே தமது நோக்கம் என தெரிவித்தார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஒன்றிணைந்து பயணிப்பதற்காக இந்த பதவியை ஏற்கவில்லை எனவும், நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டே இதை பொறுப்பேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.