நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பதிவு..!
அலரி மாளிகை சுற்றாடல் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்மவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த 9ம் திகதி சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.