22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதிவரை மாலை 6.30க்கு பின் மின்வெட்டு இல்லை! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..
க.பொ.த சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலத்தில் மாலை 6.30க்கு பின்னர் தடையற்ற மின் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
517,496 பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் யூன்1ம் திகதிவரை பரீட்சை இடம்பெறும் காலத்திலும், மாலை 6 மணியின் பின்னரும் மின்தடையை அமுலாக்க வேண்டாம்.
என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், எதிர்வரும், 21ஆம், 22ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில், மாலை 6 மணியின் பின்னர், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.