450 கிராம் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு...!
இன்று நள்ளிரவு தொடக்கம் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளது.
இதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியது,
அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.