SuperTopAds

பொதுமக்களால் நைப்புடைக்கப்பட்டு போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 நாட்களின் பின் மலர்ச்சாலை வண்டியில் வீடு திரும்பினராம்...

ஆசிரியர் - Editor I
பொதுமக்களால் நைப்புடைக்கப்பட்டு போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 நாட்களின் பின் மலர்ச்சாலை வண்டியில் வீடு திரும்பினராம்...

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து நையப்புடைக்கப்பட்டு போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 தினங்களுக்கு பின்னர் மலர்ச்சாலை வாகனத்தில் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

இவர்கள் மூவரும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேர் உட்பட நால்வர், கடந்த 9 ஆம் திகதி போராட்டகாரர்களிடம் சிக்கியுள்ளதுடன் கடுமையாக தாக்கப்பட்டு பேர வாவியில் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

பின்னர், இவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்து விட்டு, மலர்ச் சாலையை நடத்திவரும் நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாகனம் ஒன்றை தயார்படுத்தி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மாலை நேரத்தில் மலர்ச் சாலையின் வண்டி வீடுகளுக்கு வந்ததால், பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளில் இருந்தவர்கள் பதற்றமடைந்துள்ளனர். மலர்ச் சாலையின் வண்டி வந்தது பற்றி அயல் வீட்டில் உள்ளவர்கள் விசாரித்த போது சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.