புலிகளின் கதை வெறும் பொய்க்கதை என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா..!
புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம். என வெளியாகும் செய்திகள் பொய்யானவை என கூறியுள்ள முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னர் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த தீவுகளில் இப்போது அரச தலைவர்கள் பதுங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்தப்போவதாக இந்திய புலனாய்வு அமைப்புக்களை மேற்கோள்காட்சி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது, இந்த விடயம் தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், விடுதலை புலிகளின் தாக்குதல் தொடர்பில் குறிப்பிடப்படுகின்றமை முற்றிலும் பொய்யானது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் முறையற்ற விடயங்களை குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
மக்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னர் பயங்கரவாதிகள் தலைமறையாகியிருந்த தீவுகளில் தற்போது அரச தலைவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள். மக்களின் விருப்பத்திற்கு அமைய செயற்பட்டிருந்தால் இந்நிமையை ஏற்பட்டிருக்காது என்றார்.