ஜனாதிபதி வீட்டின் முன்னால் நடந்த வன்செயல்..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..
மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் வீட்டின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அமைதியின்மையை உருவாக்கிய சந்தேகநபர்களை அடையாளம்காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது பஸ் ஒன்றுக்கு தீ வைத்த மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 071-8594922, 011-2441379, மற்றும் 011-2422176 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.